Paper 2 -contemporary India and Education
ஈஷ்வர் பாய் படேல் குழு
இந்திய அரசாங்கத்தால் 1997 ஜூனில் குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ஈஷ்வர்பாய் டேல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கல்வி முறைகளை விளையாட்டு முறையாக அமைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.
முக்கியமான சிபாரிசுகள்:
* குழு சிபாரிசு செய்த திட்டங்களில் 3முக்கிய அம்சங்களிருக்கின்றன.
அவை;
மனிதவியல்
அறிவியல்
சமூக உபயோகங்கள் ஆகிய. இம்மூன்றும் இருக்கும் வகையில் மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்.
* ஒவ்வொரு வகுப்பிலும் SUPW இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.
*பள்ளிக் கலைத்திட்டத்தில் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க. கோத்தாரிக் குழு செய்த. சிபாரிசுகளையே இக்கமிட்டி சமர்பித்தது.
* 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பிற்கு கீழ்கண்ட சிபாரிசுகளை செய்தது.
ஆரம்ப நிலையில் மாணவர்கள் 2 அரை யிலிருந்து 3மணிநேரத்திற்கு அதிக நேரம் இருக்கத் தேவையில்லை.
மொமொழியைத் தவிர மற்ற பாடங்களுக்கு 1மற்றும் 2ம் வகுப்பிற்கு பாடநூல்கள் தேவையில்லை.
3 முதல்4 வகுப்பிற்கு பாடநூல் வேண்டும்.
5 ம் வகுப்பு வரை வீட்டுபாடம் தேவையில்லை.
ஒவ்வொரு பாள்ளியிலும் மாணவர்கள் செய்தறியும் திறனைப் பெற பரிசோதனை சாலை அவசியம்.
மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் விளையாட்டு முறைகளை அறியவும் விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டுமென பரிந்துரைத்தது
ஈஷ்வர் பாய் படேல் குழு வழங்கிய கல்விக் குறிக்கோள்கள்:
* எழுத்தறிவு ,கணித அறிவு, கைவேலை முதலிய கற்றல்களை தேவையான திறன்களுடன் அளித்தல்.
* அறிவியல், இயற்கை ஆகியவற்றை ஆராய்ந்து செயற்கை மூலம் கற்றல்.
* குடும்பம், பள்ளிகளில் உ தவும் மனப்பான்மையை வளர்த்தல்.
* இயற்கையை ஆராய்ந்து கலைகள் மூலம் படைப்பாற்றலை வளர்த்தல்.
* பல்வேறு இடங்கள் ,நாடுகள் ,மதங்களை சார்ந்த மக்களின் வாழ்கை முறையை,பழக்கவழக்கங்களை , பண்பாட்டை அறிந்து கொள்ள. வாய்பளித்தல்.
சமூக வாழ்வில் ,தேச சேவையில் தேவையான திறன்களோடு பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
SUPW குறிக்கோள்கள்:
* பொதுமக்களை தனியாகவோ கூட்டாகவோ கைத்தொழிலைச் செய்ய தயார்படுத்துதல்.
* உலகத்தொழிலின் முக்கியத்துவத்தையும் கையினால் செய்யக்கூடிய வேலையின் அறிவையும் குழந்தைகளுக்குத் தெரிவித்தல்.
* வேலையின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுதல்.
Comments
Post a Comment