Paper3 - Learning and Teaching
வகுப்பறைக்கு வெளியே கற்றலின் நன்மைகள்
வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் ஏராளமான செயல்களைக் கற்கின்றனர். இவை அவர்களின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன .வகுப்பறைக்கு வெளியே கற்பதில் பல தீமைகளையும் கற்கின்றனர்.
வகுப்பறைக்கு வெளியே கற்பதில் நன்மைகள்:
களப்பயணம் அல்லது களஆய்வு மூலம் கற்றல்:
* மாணவர்கள் சூழ்நிலையோடு நெருக்கமான தொடர்பைப் பெற உதவுகிறது.
* துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது.
* பள்ளியில் அருங்காட்சியகம் , கண்காட்சி வைப்பதற்கு தேவைப்படும் பொருட்களை சேகரிப்பதற்கு இது வழிவகுக்கிறது.
* மாணவர்களிடம் சமூக திறனை மேம்படுத்துகிறது.
* இணைந்து கற்றலுக்கும் கற்றலை பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது.
* கூர்ந்து நோக்கும் திறனையும் ஆய்வுத் திறனையும் வளர்த்திடுகிறது.
* பிரச்சனையைத் தீர்க்கும் திறனை வளர்க்கிறது.
வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்திக் கற்றல்:
* பொருள் படைக்கும் ஆற்றல் உரைநடைப் பகுதிகளை ஆராய்ந்தறிந்து பொருள் உரைத்தல் போன்ற திறன்களை வளர. செய்கின்றது.
* தமக்கு தேவையான தகவல்களை தாமே சேகரித்துக் கொள்ளுதல் என்ற நிலைக்கு மாறுவதற்கு ஊக்கமளிக்கிறது.
* கற்போரை மையமாகக் கொண்டு அமைகிறது.
* உயர் சிந்தனைத் திறன்களான பகுத்தறிதல் ,தொகுத்தறிதல், மதிப்பிடுதல் போன்றவற்றை வளர்கின்றது.
பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள்:
* களப்பயணத்தை திட்டமிடலும் அமைத்து நடத்திடலும் சவாலானபணியாகும்.
* செலவு மிக்கது.
* ஆய்வை மேற்கொள்ளும் இடம் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிடாமை.
* மாணவர்களின் பாதுகாப்பு.
*மாணவர்கள் களப்பயணத்தை இன்ப சுற்றுலாவாக கருதிடும் அபாயம்.
மாணவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள்:
* கணினியை இயக்கவும் பொருத்தமான தகவல்களை சேகரிக்கவும் தேவைப்படும் ஆற்றல்கள் மாணவர்களிடம் இல்லாதிருத்தல்.
* 90% தகவல்கள் ஆங்கிலத்தில் உள்ளதால் ஆங்கில அறிவு குறைவான மாணவர்கள் குறிப்பாக. இந்திய கிராமப்புற மாணவர்களுக்கு இக்கற்றல் சவாலான விசயமாகும்.
* தகவல்களை பதிவிறக்கம் செய்ய அறிந்திராமை.
* எல்லா மாணவர்களிடமும் மடிக்கணினியும் இணைய. இணைப்பும் இருக்குமென்று சொல்லுவதற்கில்லை.
வகுப்பறைக்கு வெளியே கற்றலின் நன்மைகள்:
* மாணவர்களிடம் வெளியிடத்தைப் பற்றியும் ,உலகைப் பற்றியும் புரிந்து கொள்ளும் ஆற்றல் வளர்கிறது.
* மனித நேயம் , சகிப்புத்தன்மை, ஒத்துழைப்புணர்வு பிறருடன் இணைந்து வாழும் அறிவு பெற முடிகிறது.
* மாணவர்களின் உடலியல் உளவியல் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற வகையில் கற்றல் நடைபெறுகிறது.
* அச்சத்திலிருந்து மாணவர்கள் விடுபட்டு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்கிறது.
* நேரடி அனுபவம் மூலம் கற்றல் நிகழ்வதால் மனத்தில் பதிந்து என்றும் மனத்தில் நிலைபெறும்.
Comments
Post a Comment