Paper3 - Learning and Teaching
வகுப்பறைக்கு வெளியே கற்றலின் நன்மைகள் வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் ஏராளமான செயல்களைக் கற்கின்றனர். இவை அவர்களின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன .வகுப்பறைக்கு வெளியே கற்பதில் பல தீமைகளையும் கற்கின்றனர். வகுப்பறைக்கு வெளியே கற்பதில் நன்மைகள்: களப்பயணம் அல்லது களஆய்வு மூலம் கற்றல்: * மாணவர்கள் சூழ்நிலையோடு நெருக்கமான தொடர்பைப் பெற உதவுகிறது. * துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது. * பள்ளியில் அருங்காட்சியகம் , கண்காட்சி வைப்பதற்கு தேவைப்படும் பொருட்களை சேகரிப்பதற்கு இது வழிவகுக்கிறது. * மாணவர்களிடம் சமூக திறனை மேம்படுத்துகிறது. * இணைந்து கற்றலுக்கும் கற்றலை பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. ...